உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-11-01 21:30 GMT
சிவகாசி, 

வருவாய்த்துறை அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கிராம உதவியாளர்கள் சங்கத்தை சேர்ந்த 61 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி சிவகாசி ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு 7 பெண்கள் உள்பட 25 பேரும், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு 8 பெண்கள் உள்பட 15 பேரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சிவகாசியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவகாசி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது நகர துணைத்தலைவர் பால்ராஜா தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். நகர தலைவர் சங்கர், செயலாளர் மூர்த்தி, பொருளாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக ஊரக வளர்ச்சி சி.ஐ.டி.யூ. சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் லாசர், கன்வீனர் சுரேஷ்குமார் உள்பட ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கூடுதல் துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்