நெல் கொள்முதல் கொள்கையை கைவிட மத்திய அரசு முயற்சி பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் கொள்கையை கைவிட மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2018-11-05 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

நிலத்தை பதிவு செய்வதை தமிழக அரசு கணினிமயமாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது. கணினியில் நிலம் தொடர்பான விவரங்களை பதிவு செய்யும்போது குளறுபடிகள் நடக்கின்றன. இதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசு நெல் கொள்முதல் கொள்கையை கைவிட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.

கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பத சதவீதத்தை உயர்த்த அனுமதி வழங்கவும், முன்பணம் வழங்கவும் மத்திய அரசு மறுத்து உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான உண்மை நிலையை மத்திய அரசு விவசாயிகளிடம் தெளிவுபடுத்த வேண்டும். மேலும் சம்பா பருவத்துக்கான கொள்முதல் திட்டம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், தெய்வமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்