நாக்பூர் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது ஜீப் மோதி 2 பேர் பலி ஒருவர் படுகாயம்

நாக்பூர் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது ஜீப் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-11-07 23:30 GMT
நாக்பூர்,

நாக்பூர் அருகே நடைபயிற்சி சென்றவர்கள் மீது ஜீப் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

நடைபயிற்சி

நாக்பூர் மாவட்டம் சனோர் பகுதியில் சிந்தவாரா ரோட்டில் சிலர் நேற்று காலை 6 மணியளவில் நடைபயிற்சி சென்றனர். அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று வேகமாக வந்தது. தாறுமாறாக ஓடிய அந்த ஜீப் நடைபயிற்சி சென்றவர்களில் 3 பேர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் பெயர் நகோராவ் பன்சிங்கே (வயது 41), ேஹமந்த் காலே (52) என்று தெரியவந்தது.

படுகாயம் அடைந்தவர் பெயர் கோவிந்த் சவுத்திரி (28) என்று தெரியவந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கைது

இந்த விபத்தை ஏற்படுத்திய திலிப் வாகதே என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது, அலட்சியமாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சனோர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்