கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் கூடுதல் பொறுப்பு கணக்குகளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்

வலங்கைமானில் கூடுதல் பொறுப்பு கிராம கணக்குகளை தாசில்தாரிடம் ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-08 22:45 GMT
வலங்கைமான்,

வலங்கைமான் வட்டத்தில் 3 வருவாய் ஆய்வாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் 58 கிராமங்கள் உள்ளன. இதில் 58 கிராம நிர்வாக பணி இடங்களில் 34 பணியிடங்களில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் காலி பணியிடங்களான 24 கிராமங்களையும் (பொறுப்பு) சேர்த்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் 24 கிராமங்களின் கணக்குகளை கூட்டாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் 34 கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வலங்கமான் தாசில்தார் சந்தானகிருஷ்ணனிடம் வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வலங்கைமான் வட்ட சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் கதிரேசன், மாவட்ட பொருளாளர் இளையராஜா, மாவட்ட செய்தி தொடர்பாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்