மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் தேசிய அளவிலான விருது வழங்கும் விழா; கவர்னர் கலந்து கொள்கிறார்

மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் விருது வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.

Update: 2018-11-09 22:48 GMT

மதுரை,

மதுரை வேலம்மாள் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வேலம்மாள் “இன்னோவே‌ஷன் சம்மிட் அவார்ட்ஸ் 2018” என்ற பெயரில் தேசிய அளவிலான விருது வழங்கும் விழா இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு இந்தியாவின் அனைத்து மருத்துவக்கல்லூரிகளில் இருந்தும் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் 22 பேரை தேர்வு செய்து அவர்களின் புதுமை ஆராய்ச்சிகள் சமர்ப்பிக்கப்படும். அதில் இருந்து ஆய்வு குழுவினர் சிறந்த 3 ஆராய்ச்சிகளை தேர்வு செய்வார்கள்.

இதில் சிறந்த படைப்புகளுக்கு விருது வழங்கப்படும். விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு விருதுகள் வழங்குகிறார். வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக கவுரவ பதக்கங்களோடு ரூ.1 லட்சம், 2–ம் பரிசாக ரூ.75 ஆயிரம் மற்றும் 3–ம் பரிசாக ரூ.50ஆயிரம் வழங்கப்படுகிறது.

சிறப்பு விருந்தினர்களாக எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கீதாலட்சுமி, கோவை ஜெம் மருத்துவக்கல்லூரி சேர்மன் டாக்டர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த தகவலை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்