அரசு வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதி - நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2018-11-09 22:00 GMT
திருப்பூர், 


திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியிடம் சேவூர் ஒச்சாம்பாளையம் ஏ.டி. காலனியை சேர்ந்த பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சேவூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் மற்றும் அவரது மனைவி மனோன்மணி இருவரும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்கள். இதனை நம்பி எங்கள் பகுதியை சேர்ந்த 37 பேர் ரூ.1 கோடியே 60 லட்சம் பணம் வசூல் செய்து ஜெகநாதனிடமும், அவரது மனைவியிடமும் கடந்த ஆண்டு கொடுத்தோம்.


இதன் பின்னர் வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து கேட்டால் வேலை வாங்கி தருவதாக தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்து கொண்டிருக்கிறார். எங்களது பணத்தை திருப்பி கேட்டாலும் தர மறுக்கிறார்கள்.

எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடியே 60 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பணத்தை திரும்ப பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்