சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும்

சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று, பணியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2018-11-10 22:45 GMT
தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்க கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னதாக பொதுச்செயலாளர் அயோத்தி வரவேற்றார். இதில் தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற சத்துணவு பணியாளர் சங்க மாநில தலைவர் விஜயபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில், தமிழ்நாடு அரசு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத்துறை என்ற தனித்துறை ஏற்படுத்திடவேண்டும். சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி விதிகள் ஏற்படுத்தி பணிவரன்முறை செய்திடவேண்டும்.

பள்ளிகளில், பள்ளி அலுவலகப்பணி, யோகா, உடற்பயிற்சி மற்றும் நன்னடத்தை கல்வி ஆகியவற்றை மாணவ-மாணவிகளுக்கு கற்பிக்க சத்துணவு அமைப்பாளர்களுக்கு உரிய பயிற்சி தந்து பள்ளிகளில் நிரந்தரமாக பணியாற்ற ஆணையிட வேண்டும். கல்வித்தகுதி அடிப்படையில் உரிய காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றிகூறினார்.

மேலும் செய்திகள்