அரியலூரில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

Update: 2018-11-13 22:15 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் ஒரு தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் அரங்கசாமி, பொருளாளர் சிங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மத்திய அரசை போல மாநில அரசும் ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் தொகை வழங்க வேண்டும். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) மாவட்ட தலைநகரான அரியலூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. வருகிற 24-ந் தேதி அன்று 75 வயது நிரம்பிய சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நடைபெறும் பாராட்டு விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் இறந்தமைக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்