கிருஷ்ணகிரியில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-14 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளையொட்டி, குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி “என் நண்பன் குழந்தைகளின் உரிமைகள்“ என்பது குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடந்தது. இந்த கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது பள்ளி குழந்தைகள், மாவட்ட கலெக்டர் மற்றும் அலுவலர்களுக்கு ரக்‌ஷாபந்தன் கயிறுகளை கட்டினர். பின்னர் கலெக்டர் பிரபாகர் தலைமையில் குழந்தைகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இதில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் சரவணன், வின்சென்ட் சுந்தர்ராஜன், தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்ட அலுவலர் பிரியா, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்னகுமாரி, சுபாஷ், பாலசந்திரன், ரமேஷ் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்