வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது: நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள வீடுகளில் புகுந்தது.அங்கு வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2018-11-16 22:30 GMT
வந்தவாசி,

வந்தவாசி நகராட்சி 3–வது வார்டு பகுதியில் கோட்டைக்குள் முஸ்லிம் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பின்புறம் உள்ள தெருவில் கால்வாய் வசதி இல்லாததால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து அங்குள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை 10 மணியளவில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, துப்புரவு ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் முற்றுகை போராட்டம் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் நிரந்தர தீர்வு தேவை என பொதுமக்கள் கோரினர். கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் உறுதி அளித்ததைத்தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்