புயல் கரையை கடந்ததால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

கஜா புயல் கரையை கடந்ததை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2018-11-17 23:30 GMT
ராமேசுவரம்,

கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து சில நாட்களாக ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

புயல் கரையை கடந்ததை தொடர்ந்து நேற்று ராமேசுவரத்தில் இருந்து 491 படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

புயல் காரணமாக பாம்பன் தென்கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்ட படகுகள் நேற்று மதியம் தூக்குப்பாலம் திறந்தபின், வடக்கு கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

புயல் காரணமாக கடந்த 2 நாட்களாக ராமேசுவரத்துக்கு ரெயில் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கஜா புயல் கரையை கடந்ததால் பாம்பன் ரெயில் பாலத்தில் தண்டவாளங்களில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டு உள்ளதா? என்று நவீன கருவி மூலம் நேற்று சரிபார்க்கப்பட்டது. அதன் பின்னர் அனைத்து ரெயில்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்