திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் பெண் ஊழியர்களை தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி தர்ணா

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் பெண் ஊழியர்களை தாக்க முயன்றவர்்களை கைது செய்ய வலியுறுத்தி ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-18 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு பணி, காவலாளி பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் சிலர் பெண் ஒப்பந்த ஊழியர்களிடம் தண்ணீர் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்். அப்போது ஊழியர்களை அவர்கள் திட்டி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெண் ஊழியர்களை தாக்க முயன்றவர்களை கைது செய்யக்கோரி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஒப்பந்த ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார்் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் போராட்டம் குறித்து ஒப்பந்த ஊழியர்கள் கூறுகையில், ஒப்பந்த பணியாளர்்களுக்கு தொடர்ந்து பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றோம். எனவே தாக்க முயன்றவர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற சம்பவங்கள் தடுக்க முடியும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்