வெண்டிபாளையத்தில் மூடிய டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும்; கலெக்டரிடம் குடிமகன்கள் மனு

மூடிய டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க வேண்டும் என கலெக்டரிடம் குடிமகன்கள் மனு அளித்தனர்.

Update: 2018-11-19 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட குடிமகன்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, கலெக்டர் கதிரவனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–

எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த கடை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரால் மக்கள் போராட்டம் நடத்தி மூடிவிட்டனர். இதனால் நாங்கள் மது அருந்த வேண்டும் என்றால் சோலார் செல்ல வேண்டி உள்ளது.

அங்கு சென்று மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வரும் போது சில நேரங்களில் எங்களுக்கு விபத்து ஏற்படுகிறது. எங்கள் பகுதியில் செயல்பட்ட டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே எங்கள் பகுதியில் மூடிய டாஸ்மாக் கடையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்