புயல் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்; தமிழக அரசுக்கு, வைகோ கோரிக்கை

புயல் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு, வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.

Update: 2018-11-19 23:30 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது–

சுனாமிக்கு அடுத்து அதிர்ச்சி தரத்தக்க சேதத்தை கஜா புயல் 8 மாவட்டங்களில் தந்துள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தொற்று நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. விவசாயிகளின் 15 வருட உழைப்பு வீணாகி உள்ளது. எனவே சரியான கணக்கெடுப்பின் மூலம் அந்த குடும்பங்களை வாழ வைப்பதற்கான அடுத்த கடமையை அரசு செய்ய வேண்டும். விவசாயத்தை சரி செய்ய வேண்டிய வேலையை அரசு செய்ய வேண்டும். முன்எச்சரிக்கை நடவடிக்கைகளில் எவ்வாறு தீவிரம் காட்டப்பட்டதோ அதேபோல நிவாரண நடவடிக்கைகளிலும் அரசு தீவிரம் காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்