கழிவுநீர் வாய்க்கால்களை அகலப்படுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு

கழிவுநீர் வாய்க்கால்களை பலப்படுத்தவும், அகலப்படுத்தவும் கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

Update: 2018-11-25 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று அதிகாரிகளுடன் நகரில் உள்ள மிகப்பெரிய கழிவுநீர் வாய்க்கால்களில் ஆய்வுகளை நடத்தினார். இந்த ஆய்வில் நிதித்துறை செயலாளர் கந்தவேலு, மாநில அவசர கால மைய இயக்குனர் பங்கஜ்குமார் ஜா, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது, கருவடிக்குப்பம் வாய்க்காலை அது சங்கமிக்கும் இடம் வரை முன்மாதிரியாக கான்கிரீட் சுவருடன் அமைக்க உத்தரவிட்டார். மேட்டுவாய்க்காலை பாவாணர் நகர் முதல் உப்பனாற்றில் அது சங்கமிக்கும் இடம் வரை அகலப்படுத்த கேட்டுக்கொண்டார்.

உழந்தை ஏரியிலிருந்து வரும் உபரி நீரை வெளியேற்ற புதிய திட்டம் தயாரிக்கவும் அறிவுறுத்தினார். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பாதாள சாக்கடையில்தான் விடவேண்டும். திறந்தவெளியில் விடக்கூடாது. அவ்வாறு விடாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்கண்ட திட்டங்களுக்கான வரைவுகளை அனுப்பினால் அதற்கான நிதி ஒதுக்கீடு வாய்ப்புகளை கண்டறிந்து விதிகளுக்கு உட்பட்டு பிப்ரவரி மாதம் டெண்டர் விடவும் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்