சுசீந்திரம் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

சுசீந்திரம் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2018-11-28 22:15 GMT
கன்னியாகுமரி,

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பலகோடி ரூபாய் சொத்துகளை தனியார் சிலர் ஆக்கிரமித்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவற்றை தமிழக அரசு மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலகோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகளை தனியார் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக தெரியவந்தது. அவற்றை மீட்க இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுபடி குமரி மாவட்ட திருக்கோவில்கள் இணை ஆணையர் அன்புமணி உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குழு தலைவர் ஜீவானந்தம் தலைமையிலான நில அளவை அலுவலர் அய்யப்பன், மேலாளர் சண்முகம்பிள்ளை, மராமத்து என்ஜினீயர்கள் ராஜ்குமார், அகஸ்தீயலிங்கம் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்தநிலையில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 22 சென்ட் நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இதேபோல் அறநிலையத்துறைக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க கிராமம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த நிலங்களை மீட்க துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்