காஞ்சீபுரத்தில் ரூ.6 கோடி கோவில் நிலம் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சீபுரத்தில் ரூ.6 கோடி கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2018-11-28 22:50 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற சாந்தாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள் அதற்கான வாடகை செலுத்தாமல் வாழை பயிரிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அறநிலையத்துறையினர் மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ரமணி, தியாகராஜன், அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் அலமேலு, மற்றும் கோவில் பணியாளர்கள் நேற்று சாந்தாலீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர்.

அங்கு வாழை பயிரிடப்பட்டிருந்த ஒரு ஏக்கர் நிலத்துக்கான கிரில் கேட்டுக்கு அறநிலையத்துறையினர் சீல் வைத்தனர். இது கோவிலுக்கு சொந்தமான இடம் யாரும் பிரவேசிக்கக்கூடாது என்று எழுதி விட்டு சென்றனர்.

இதன் மூலம் ரூ.6 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

மேலும் செய்திகள்