குடிநீர், மின்சாரம் கேட்டு 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்

குடிநீர், மின்சாரம் கேட்டு 5 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-29 22:45 GMT
கீரமங்கலம்,

கஜா புயலால் பாதிக்கப் பட்டு 13 நாட்களுக்கு மேலாக கீரமங்கலம் பகுதியில் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப் பாடு இன்னும் குறையவில்லை. கிராமங்களில் அதிகமாக சாய்ந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தாலும் பல இடங்களுக்கு மின்சாரம் கிடைக்காமல் குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி களில் ஏற்ற முடியாமல் தவிக் கின்றனர். கீரமங்கலம் அருகில் உள்ள லெட்சுமிநரசிம்மபுரம் ஊராட்சி புளிச்சங்காடு, கைகாட்டி, அண்ணாநகர் மற்றும் பல பகுதிகளுக்கு மின் இணைப்புகள் இன்னும் சீரமைக்கப்படாததால், குடி நீருக்காக மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து குடிநீர் வழங்கப்பட் டாலும் கால்நடைகளுக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. இதனால் விரைவாக மின் இணைப்புகளை கொடுக்க வேண்டும். சாய்ந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று கூறி கைகாட்டியில் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதேபோல் அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம் கடை வீதி, கீழதேமுத்துபட்டி, சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட் டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்சாரம் வழங்ககோரி புதுக்கோட்டை- மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி, தாசில்தார் ரமேஷ், மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் முத்து சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக் டர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின்கம்பங்கள் சரிசெய்து உடனடியாக மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தையடுத்து பொதுமக்கள் கலைந்து சென் றனர். இதனால் புதுக் கோட்டை- மதுரை சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

அரிமளம் ஒன்றியம் பெருங் குடி, வன்னியம்பட்டி உள் ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மின்சார வினியோகம் செய்ய வலி யுறுத்தி பெருங்குடி விலக்கு ஆலமரம் பஸ் நிறுத்தத்தில் மழையில் நனைந்தபடி மறியலில் ஈடுபட்டனர்.

அரிமளம் ஒன்றியம் மிரட்டு நிலை கிராமத்தில் பெரும் பாலான பகுதிக்கு மின்வினி யோகம் செய்யபட்டது. ஒரு பகுதிக்கு மட்டும் மின்வினி யோகம் செய்யபடவில்லை. சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக விழுந்து கிடந்த மின்கம்பத்தை அகற்ற வேண் டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட் டனர். தகவல் அறிந்து வந்த முன் னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரன், உதவிபொறியாளர் முத்துசாமி மற்றும் அரிமளம் போலீசார் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென் றனர். இதை யடுத்து உடனடி யாக சாலையில் கிடந்த மின் கம்பங்கள் அகற்றப்பட்டது.

கீரனூர் அடுத்துள்ள நரங்கியன்பட்டி கிராமத்தில் மின்சாரம், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர் களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்