அரசு பள்ளி மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டையில் அரசு பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சியை, மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

Update: 2018-11-30 22:30 GMT

நெல்லை,

பாளையங்கோட்டையில் அரசு பள்ளிக்கூட மாணவ–மாணவிகளின் அறிவியல் கண்காட்சியை, மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

அறிவியல் கண்காட்சி

பாளையங்கோட்டையில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் அரசு பள்ளிக்கூட மாணவ–மாணவிகள் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை அமைத்து இருந்தனர். அந்த கண்காட்சி நேற்று தொடங்கியது.

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:–

ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிக்கூட மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது. சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசு வழங்கப்படும்.

100 அரசு பள்ளிக்கூடங்கள்

இந்த கண்காட்சியில் 100 அரசு பள்ளிக்கூடங்கள் பங்கு பெற்றுள்ளன. ஒரு பள்ளிக்கூடத்துக்கு 2 மாணவர்கள், ஒரு ஆசிரியர் என 100 ஆசிரியர்களும், 200 மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

கல்லூரி ஆசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் சிறந்த அறிவியல் மாதிரியை தேர்வு செய்வார்கள். முதல் பரிசாக ரூ.1,500–ம், இரண்டாவது பரிசாக ரூ.1,000–ம், மூன்றாவது பரிசாக ரூ.500–ம் வழங்கப்படும். மேலும் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ், முதல்வர் கோல்டா கிரேனா ராஜாத்தி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், ரேணுகா, சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்