பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை; காங்கிரஸ் வலியுறுத்தல்

வேலை இழந்து தவிக்கும் பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2018-12-01 22:31 GMT
சாத்தூர்,

சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் முன்னாள் எம்.பி. யுமான மாணிக்தாகூர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் சாத்தூர் நகர தலைவர் கருப்பசாமி, கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து மாணிக்கம்தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:–

கஜா புயல் பாதிக்கபட்ட பகுதிகளுக்கு 11 நாள் கழித்துதான் மத்திய மந்திரி நிர்மலாசித்தாராமன் பார்வையிட வந்துள்ளார்.மோடி அரசு தமிழக அரசை கண்டுகொள்ளவில்லை. கஜா புயலால் 10 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் அவர்களுக்கு தமிழக அரசு சிமெண்டு சீட்டுகள் கொடுத்து வீடுகட்ட பணம் கொடுக்க வேண்டும்.

பட்டாசு ஆலைகள் மூடபட்டுள்ள நிலையில் அதனை நம்பி வாழ்ந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அமைத்து ரூ.150 சம்பளத்தை ரூ.250 ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்