2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-12-05 23:30 GMT
திருப்பூர்,

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி பல்லடத்தில் நகர பொதுச்செயலாளர் சரளை பி.ரத்தினசாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பல்லடம் பஸ் நிலையம் முன்பு என்.ஜி.ஆர்.ரோடு மற்றும் பல பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் நடராஜன், சித்துராஜ், பானு பழனிசாமி, விஸ்வநாதன், பாரதி செல்வராஜ், சுப்பிரமணி, லட்சுமணன், குமார், அபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அவினாசி வடக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெயலலிதாவின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேவூர் ஒன்றிய அலுவலகம், கைகாட்டி ரவுண்டானா, ஏரிமேடு, போலீஸ் நிலைய பஸ் நிறுத்தம், வடக்கு வீதி, அவினாசி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பங்குளம், போத்தம்பாளையம், புஞ்சை தாமரைக்குளம், தத்தனூர், குட்டகம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் அவினாசி வடக்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளர் பி.பி.சிவனேசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.குமரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் முபாரக் அலி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் கே.கண்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் அருண்பிரேம், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் பொன்னரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைசெயலாளர் பிரபு, ஒன்றிய மாணவரணி செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் திருமலைசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கே.எஸ்.பழனிசாமி மற்றும் பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோல் பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சிவாசலம் தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகம், யு.எஸ்.பழனிசாமி, முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் மில்ஆறுமுகம், வக்கீல் சிவா, சந்திரன், ராஜேந்திரன், மகுடீஸ்வரன், வேலன்தங்கவேல், செந்தில், பரணிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதுபோல் கொடுவாய், கேத்தனூர், அவினாசிபாளையம், பெருந்தொழுவு உள்பட ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் ஆர்.சாமிநாதன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பட்டம் பாளையம் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.எம்.பழனிசாமி, பாசறை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துரத்தினம், சுலோச்சனா வடிவேல், ஸ்ரீதேவி பழனிசாமி, சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் மேக்னம் பழனிசாமி, பொன்னுலிங்கம், சிதம்பரம், அவினாசியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

15 வேலம்பாளையம் பகுதி அ.தி.மு.க.சார்பில் அனுப்பர்பாளையம் சந்திப்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் கருணா கரன் தலைமை தாங்கினார். 1-வது மண்டல முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலைவகித்தார். இதையொட்டி ஜெயலலிதாவின் படத்திற்கு அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில் பகுதி தலைவர் வி.கே.பி.மணி, பொருளாளர் ஈஸ்வரன், நிர்வாகிகள் திலகர்நகர் சுப்பு, ராஜா, குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் 15 வேலம்பாளையம் சீரணி கலையரங்கத்தில் பகுதி தலைவர் வி.கே.பி.மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவராஜ், பழனிவேல், சிவக்குமார், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் தண்ணீர்பந்தல் காலனி 15 வேலம்பாளையம்,அங்கேரிபாளையம் ஆகிய இடங்களில் முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர்பந்தல் தனபால் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் சதீஷ், 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் பாலுச்சாமி, இணை செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி ஜெயலலிதா படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் சாமிநாதன், செல்வராஜ், வடிவேல்,பழனிச்சாமி, ஆறு முகம், பொன்னுசாமி, எல்.பி.பழனிச்சாமி, மணிமாறன், இளவரசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்