மொடக்குறிச்சி அருகே முறைகேடாக ரசாயன பொருள் பயன்படுத்திய 5 கரும்பாலைகளுக்கு ‘சீல்’ - அதிகாரிகள் நடவடிக்கை

மொடக்குறிச்சி அருகே முறைகேடாக ரசாயன பொருள் பயன்படுத்திய 5 கரும்பாலைகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2018-12-05 22:49 GMT
மொடக்குறிச்சி,

மொடக்குறிச்சி அருகே முள்ளாம்பரப்பு, அசோகபுரம், வடபழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரும்பாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு முறைகேடாக ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அந்த ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்தார்கள். அதன்பேரில் ஈரோடு உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் குழுவினர் நேற்று முள்ளாம்பரப்பு, அசோகபுரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரும்பாலைகளுக்கு சென்றனர்.

அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெல்லத்தை எடுத்து சோதனை செய்தனர். இதில் 5-க்கும் மேற்பட்ட ஆலைகளில் வெல்லம் தயாரிக்க முறைகேடாக பயன்படுத்தப்பட்ட சூப்பர் பாஸ்பேட் 14 மூட்டைகளும் அதை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 550 கிலோ சர்க்கரையும் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 5 ஆலைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.


மேலும் செய்திகள்