கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.46 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.46 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Update: 2018-12-06 22:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.46 லட்சத்தில் கட்டப்பட்டு உள்ள புதிய கட்டிடங்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள் திறப்பு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சம் செலவில் சித்த மருத்துவ பிரிவு, ரூ.15 லட்சம் செலவில் புற்று நோயாளிகளுக்கான ஆதரவு சிகிச்சை மையம், ரூ.20 லட்சம் செலவில் பிரசவ முன்கவனிப்பு பிரிவு ஆகியவை புதிதாக கட்டப்பட்டு உள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் விஜயா முன்னிலை வகித்தார்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய கட்டிடங்களை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதா செரீன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், தாசில்தார் பரமசிவன், நகரசபை ஆணையாளர் அட்சயா, யூனியன் ஆணையாளர்கள் கிரி, முருகானந்தம், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்