விபத்தால் ஏற்பட்ட தகராறில் சமசரம் செய்த போக்குவரத்து போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளும், வேனும் மோதிக்கொண்டன.

Update: 2018-12-07 22:45 GMT
பிராட்வே,

இதில் வேன் டிரைவருக்கும், மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடி மார்க்கெட் பகுதியை சேர்ந்த மாறன் (வயது 40) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் போக்குவரத்து போலீஸ் ஏட்டு முத்துராம் (45), சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

அவர், தகராறில் ஈடுபட்ட 2 பேரையும் சமரசம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தார். இதில், முத்துராம் மீது மாறனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதையடுத்து எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த முத்துராமை, மாறன் இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் முத்துராமுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இந்த சம்பவம் குறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குபதிவு செய்து, போலீஸ் ஏட்டு முத்துராமை இரும்பு கம்பியால் தாக்கிய மாறனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்