மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு

மின்சாரம் வழங்க வலியுறுத்தி வேலூரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-07 19:13 GMT
திருத்துறைப்பூண்டி,

மின்சாரம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கஜா புயலினால் திருத்துறைப்பூண்டியில் எண்ணற்ற மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. மேலும் பொதுமக்கள் தங்களின் வீடுகளை இழந்து, வளர்த்த கால்நடைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேலூரில் புயலால் பாதிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் மின்சாரம் வழங்கவில்லை.

ஆதலால் உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தி வேலூரில் பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் குமார், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் குணா, ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிஅளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி-திருவாரூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்