வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல், மேலாளர் கைது

வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்ட 40 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-12-07 22:30 GMT

வில்லியனூர்,

புதுவை வில்லியனூர் உளவாய்க்கால் பகுதியில் தனியார் வைத்தியசாலை இயங்கி வருகிறது. இங்கு சந்தனமரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து வனக்காப்பாளர் குமார், துணை வனகாப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் அதிகாரிகள் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சுமார் 40 கிலோ எடையுள்ள சந்தனை கட்டைகள் சாக்கு பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அந்த சந்தன கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வைத்தியசாலையின் மேலாளர் விஜயன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். வைத்திய சாலைக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த வைத்தியசாலையின் நிறுவனர் முகமது பஷீர் என்பவரை தேடிவருகிறார்கள். அந்த சந்தன கட்டைகள் கேரள மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்