போலீசாருக்கு மனநல ஆலோசனை பயிற்சி வகுப்பு மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்ட போலீசாருக்கான மனநல ஆலோசனை பயிற்சி வகுப்பினை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தொடங்கி வைத்தார்.

Update: 2018-12-07 21:45 GMT
கரூர், 

கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மனநலம் பற்றிய ஆலோசனை, பயிற்சி வகுப்பு நேற்று கரூர் ஆயுதப்படை மைதான கட்டிடத்தில் நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் தலைமை தாங்கினார். இதில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து பேசினார். இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், பாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கும்மராஜா, முத்தமிழ்செல்வன், சிற்றரசு, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

கரூரில் நடக்கும் பயிற்சி வகுப்பில் முதல் கட்டமாக அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்பட 39 பேர் பங்கேற்கின்றனர். வாரத்தின் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அவர்களுக்கு மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வகுப்பில் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து கலந்து கொள்கின்றனர்.

சுழற்சி முறையில் ஓராண்டுக்கு இந்த வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. பாலவிடுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார், வெங்கமேடு சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா, கொங்கு கலை அறிவியல் கல்லூரி விரிவுரையாளர் வடிவேல் ஆகிய குழுவினர் பெங்களூருவில் உள்ள தேசிய மனம் மற்றும் உடல்நல ஆரோக்கிய மையத்தில் சிறப்பு பயிற்சியை பெற்று வந்திருக்கின்றனர். அந்த குழுவினர் கரூர் மாவட்ட போலீசாருக்கு பயிற்சி வழங்குகின்றனர்.

மேலும் செய்திகள்