விலையில்லா மாடுகள் வழங்கக்கோரி கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

விலையில்லா மாடுகள் வழங்குவது தாமதம் ஆனதால் நேற்று அப்பகுதி பெண்கள் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-10 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் இடங்கன்னி மற்றும் அண்ணன்காரன்பேட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச கறவை மாடுகள் வழங்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு விலையில்லா மாடுகள் வழங்குவது தாமதம் ஆனதால் நேற்று அப்பகுதி பெண்கள் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள சின்னவளையம் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜ்யக்குடி மற்றும் கால்நடை மருத்துவர்கள் கண்ணன், செந்தில்குமார், வெற்றிவடிவேலன், வீரேந்திரஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் சிவசக்தி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அதிகாரிகள் கூறுகையில், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விரைவில் மாடுகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்