நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த செலவில் விவசாயம் செய்யலாம்; வேளாண் அதிகாரி தகவல்

நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த செலவில் விவசாயம் செய்யலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-13 22:45 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர்கள் குழுவில் உள்ள விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் தொடர்பான பயிற்சி எஸ்.புதூர் வட்டாரம், கிழவயல் ஊராட்சி பொன்னடப்பட்டியில் நடந்தது. இதில் வேளாண் உதவி பொறியாளர் நாகசண்முகம் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:– அதில் நுண்ணீர் பாசனத்தில் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் பயிர் செய்யலாம். இதன் மூலம் குறைந்த செலவில் விவசாய பணிகளை செய்யலாம். இந்த பாசனத்தில் மூலம் அதிக சாகுபடியையும் பெறலாம். செலவு குறைவு, அதிக வருமானம் ஆகிய முக்கிய அம்சங்கள் இந்த நுண்ணீர் பாசனம் மூலம் கிடைப்பதால், இந்த முறையை விவசாயிகள் தொடர்ந்து பின்பற்றலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண்மை உதவி இயக்குனர் அழகுராஜா வேளாண்மைத்துறையில் திட்டப்பணிகள் குறித்தும், சொட்டுநீர் பாசன முறைகள் மற்றும் பராமரிப்பு பற்றியும் எடுத்துக்கூறினார்.

மேலும் வேளாண் பொறியியல் துறை சீனிவாசன் கூறுகையில், நுண்ணீர் பாசனம் மூலம் ஆட்களுக்கு ஆகும் செலவு குறைக்கப்படும். தரமான விதை பொருட்களுடன், அதிக விளைச்சலும் கிடைக்கும் என எடுத்துக்கூறினார். முடிவில் முன்னோடி விவசாயி வள்ளியப்பன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்