பிரதமர் மோடியுடன் பட்னாவிஸ் சந்திப்பு : வறட்சி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடியை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்தார். அப்போது, மராட்டியத்துக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தினார்.

Update: 2018-12-15 00:22 GMT
மும்பை,

மராட்டியத்தில் பருவம் தவறிய மழையால் 26 மாவட்டங்களில் உள்ள 151 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளன. இதற்காக மாநில அரசு ரூ.7,900 கோடிமத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதி கோரியுள்ளது. இந்தநிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது, வறட்சி நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினார். தாராவி சீரமைப்பு திட்டத்தில் உள்ள ரெயில்வே நிலப்பிரச்சினைபற்றியும் பிரதமரிடம் பேசினார்.

மேலும் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த தொழில் மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த தகவல்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். அதில், மராட்டிய மக்களுக்கு தொடர்ச்சியாக அளித்த ஆதரவுக்கு பிரதமர் மோடிக்கு நன்றியும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்