மணப்பள்ளி கூட்டுறவு சங்கத்தில் பயிர் கடன் வழங்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மணப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் வழங்ககோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-15 22:30 GMT
மோகனூர், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகின்றது. இதில் பெரமாண்டம்பாளையம் ஊராட்சி மற்றும் மணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 2100-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு, நகைக்கடன், விவசாய கடன்கள், வழங்கப்பட்டு வருகிறது.

இங்கு வழங்கப்படும் பயிர் கடன்களுக்கு உரிய காலக்கெடுவிற்குள் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு, மீண்டும் 7 நாட்களுக்குள் கடன் வழங்க வேண்டும். ஆனால் மணப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறையாக கடனை செலுத்தி 20 விவசாயிகளுக்கும், புதிதாக கடனுக்கு மனு கொடுத்த 31 விவசாயிகள் என 51 விவசாயிகளுக்கு 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை பயிர் கடன் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும் என கோரி விவசாயி கள் நேற்று கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர்.

மேலும் செய்திகள்