700 பெண்களுக்கு திருமண நிதி உதவி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

700 பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

Update: 2018-12-16 00:57 GMT

சாத்தூர்,

சாத்தூரில் சமூக நலத்துறை சார்பில் ஏழை எளிய பெண்களின் திருமணத்திற்கான தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடந்தது. அப்போது 700 பெண்களுக்கு ரூ.4 கோடியே 26 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவினை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

விழாவில் அவர் பேசுகையில் கூறியதாவது:–

ஜெயலலைதா கொண்டு வந்த திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. இந்த திட்டங்களினால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சுமார் ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்து, மாவட்ட வாரியாக அமைச்சர்களை நியமனம் செய்து, நிவாரணப்பணிகளை மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.

விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டதோடு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆலங்குளம் சிமெண்டு ஆலை விருந்தினர் விடுதிக்கு வந்த அவரிடம் பொது மக்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது கலெக்டர் சிவஞானம், தாசில்தார் ராஜ்குமார், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. அவை தலைவர் அழகர்சாமி, மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஈஸ்வரி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மாரியப்பன், திருப்பதி, புலிப்பாறைப்பட்டி மணிகண்டன், சங்கரமூர்த்திபட்டி முருகன், கரிசல்குளம் பரமானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்