தஞ்சை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 16 பேர் கைது

தஞ்சை மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்ற 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2018-12-16 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரிகள் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். ஆனால் ரகசியமாக பல்வேறு இடங்களில் வெளி மாநில லாட்டரிகள் விற்கப்படுகிறது. இந்த லாட்டரிகளை விற்போரையும், விற்பதற்காக அவற்றை பதுக்கி வைத்திருப்போரையும் போலீசார் கைது செய்துவருகின்றனர்.

இந்த நிலையில் பூக்கார தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை அண்ணாநகர் பஸ்நிலையம், பர்மா பஜார், மேலவீதி அய்யங்குளம் அருகே மற்றும் தெற்கு அலங்கம் ஆகிய பகுதிகளில் வெளிமாநில லாட்டரிகளை விற்ற தஞ்சை குருங்குளம் தோழகிரிபட்டி பகுதியை சேர்ந்த ராஜாராமன் (வயது 37), அண்ணாநகர் செபாஸ்டின் (48), களிமேடு பரிசுத்தம் நகர் நவீன் (41), கரந்தை சேகர் (58), கீழவாசல் ஆட்டுமந்தை தெரு முகமது இஸ்மாயில் (29) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து வெளிமாநில லாட்டரிகள், ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தஞ்சை நகர தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு போலீசார் வழக்குப்பதிவுப் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல, பட்டுக்கோட்டை பகுதியில் வெளி மாநில லாட்டரிகள் விற்றதாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்