கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணத்தொகை இன்னும் கிடைக்கவில்லை, பொதுமக்கள் புகார்

காரைக்கால் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக் களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை இன்னும் கிடைக்கவில்லை என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

Update: 2018-12-18 23:15 GMT
காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமை தாங்கினார். சார்பு ஆட்சியர் விக்ராந்த் ராஜா மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதுவைக்குரல் என்ற இணையதளம் மூலம் வந்த புகார்களுக்கு அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேசவன் கேட்டறிந்தார்.

அதனைதொடர்ந்து குறைதீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கூறியதாவது:-

கஜா புயலால் காரைக்காலில் பல்வேறு இடங்களில் தெருவிளக்குகள் சேதம் அடைந்தன. அவற்றை அதிகாரிகள் உடனே சரி செய்ய வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அந்த தொகை பாதிக்கப்பட்ட மக்கள் வங்கி கணக்கில் இதுவரை வந்து சேரவில்லை. இதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கோட்டுச்சேரி, திருவேட்டக்குடி, நெடுங்காடு ஆகிய கிராமங்களுக்கு இந்த ஆண்டு பாசனத்திற்கு திறந்துவிடப்படும் காவிரி நீர் இன்னும் திறக்கப்படவில்லை. புதுவை அரசு விவசாயிகள் நலன் கருதி காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்