17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம்

17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

Update: 2018-12-20 22:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வள்ளல்பாரி தலைமை தாங்கினார். பொருளாளர் சக்திவேல், இணை செயலாளர் கேசவன், வட்ட தலைவர்கள் காமராஜன், சவுந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட செயலாளர் பாக்யராஜ் வரவேற்றார். சங்க நிறுவனர் துரை.ராசமாணிக்கம், மாநில செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும், கூடுதல் பணி கிராமத்திற்கு பணி செய்யும் காலம் முழுவதும் பொறுப்பூதியம் வழங்க வேண்டும், மாவட்ட மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும், புதிய மடிக்கணினி வழங்க வேண்டும், 2014-ம் ஆண்டில் இருந்து இணையதள சேவைக்கான நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைத்தலைவர் ராஜா, துணை செயலாளர் தினகரன், வட்ட செயலாளர்கள் கோபிநாத், முத்து, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், சங்க ஆலோசகர்கள் அரங்கநாதன், சின்னப்பன், முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்