திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் மனித சங்கிலி போராட்டம்

திருவாரூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-24 23:00 GMT
திருவாரூர்,

கிராம நிர்வாக அலுவலகங்களில் குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கிராம நிர்வாக அதிகாரிகளின் அடிப்படை கல்வி தகுதியை பட்ட படிப்பாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அதிகாரிகள் கடந்த 10-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி திருவாரூர் மாவட்ட உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அதிகாரிகள் நேற்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கிராம நிர்வாக அதிகாரிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜகுமார், மாவட்ட பொருளாளர் சற்குணம் உள்பட பலர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல மன்னார்குடியில் நேற்று உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் கிராம அலுவலர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்