கும்பகோணத்தில் மாரத்தான் பந்தயம் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்பு

குடிநீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று மாரத்தான் பந்தயம் நடைபெற்றது.

Update: 2018-12-30 22:30 GMT
கும்பகோணம்,

குடிநீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று மாரத்தான் பந்தயம் நடைபெற்றது. இதில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கும்பகோணம் மாரத்தான் கழகம் சார்பில் இந்த பந்தயம் நடந்தது. நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாரத்தான் பந்தயம் தொடங்கியது. பல்வேறு வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கும்பகோணம் அன்பழகன் எம்.எல்.ஏ., மாவட்ட அரிமா சங்க ஆளுனர் எச்.ஷேக்தாவூத் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் மாரத்தான் கழகத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்