காளிகேசம் கோவிலுக்கு செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது வனத்துறை அலுவலகத்தில் மனு

விசுவ இந்து பரி‌ஷத் திருக்கோவில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் காளியப்பன் தலைமையில் பலர் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2019-01-02 22:45 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் காளிகேசம் காளிஅம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு வாரத்தின் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், பவுர்ணமி மற்றும் இந்து பண்டிகை விசே‌ஷ நாட்களிலும் கோவிலில் பூஜைகள் நடைபெறுவது வழக்கமாகும். இங்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி அம்மனை வழிபடுவது வழக்கமாகும். இங்கு கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வருகை தரும் பக்தர்களிடம் கடந்த சில நாட்களாக கீரிப்பாறை போலீஸ் நிலையம் அருகில் வனத்துறை ஊழியர்கள், பக்தர்களின் வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் கட்டாயமாக நுழைவு கட்டணம் வசூலிக்கிறார்கள். இது பக்தர்கள் மனதை மிகவும் புண்படுத்தும் செயலாகும்.

ஆகவே பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது, காளிகேசத்தில் அடிப்படை வசதிகளான கழிப்பிடம், மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்குவதற்கு நிழலகம் அமைப்பது மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்துவதற்கும் வனத்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்