பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ-மாணவிகள் பங்கேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை நகர் முழுவதும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அம்பத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2019-01-04 22:45 GMT
சென்னை,

இதில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், மண்டல அதிகாரி ஆர்.பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் ஜெயலட்சுமி, சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகளிடம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஐ.டி.ஐ. மாணவ- மாணவிகள் பேரணியாக சென்றனர். பிளாஸ்டிக் தீமைகள் குறித்த கோஷங்கள் எழுப்பியும், பாக்கு மர தட்டுகள், சில்வர் பாத்திரங்கள், துணிப்பைகள் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடியும் சாலைகளில் பேரணியாக நடந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்