ஜெயங்கொண்டத்தில் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஜெயங்கொண்டம் கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.

Update: 2019-01-05 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர், நகராட்சி ஊழியர்கள் போலீசார் உதவியுடன் கடந்த 2 நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டு இருந்த சிமெண்டு கட்டைகள் உடைக்கப்பட்டு அவை டிராக்டர் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் சாலை, திருச்சி- சிதம்பரம் சாலை கடைவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடரும் என நினைத்து சில கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அவர்களாகவே அகற்றிக்கொண்டனர். போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படும் வகையில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக போலீஸ் துறையினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்