பருவமழை பொய்த்ததால் நிலக்கடலை செடிகள் கருகும் பரிதாபம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்தனர்.

Update: 2019-01-05 23:35 GMT
வேடசந்தூர்,

அந்த வகையில் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தமுத்துப்பட்டி, அழகாபுரி, வள்ளிபட்டி, கல்வார்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. இதற்காக விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் இருந்து கிடைத்த தண்ணீரை பாய்ச்சி வந்தனர். ஆனால், வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் பொய்த்து போனது.

இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பெரும்பாலான கிணறுகள் வறண்டு விட்டன. இதனால் தண்ணீர் இல்லாமல் நிலக்கடலை செடிகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க விவசாயிகள் போராடி வருகின்றனர். இதற்காக தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனர். இதில் ஒரு டிராக்டர் தண்ணீர் ரூ.900-க்கு வாங்குவதால், நிலக்கடலையில் எதிர்பார்த்த அளவு வருமானம் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்