மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்: மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை கலெக்டர் பொன்னையா வழங்கினார்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமை வகித்தார்.

Update: 2019-01-07 22:30 GMT
காஞ்சீபுரம்,

இக்கூட்டத்தில் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரியில் பயிலும் 22 மாணவ, மாணவியர்களுக்கு முதல்- அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.48 ஆயிரத்திற்கான கல்வி உதவித்தொகையையும், 4 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும், 18 வயது மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களுக்காக பாதுகாவலர் நியமன சான்றையும் கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.

மேலும் கொடி நாள் நிதியாக ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனிவாசன், வசுமதி ஆகியோர் ரூ.3 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையையும், அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரி சார்லஸ் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்