நிவாரண தொகை கிடைக்காததை கண்டித்து கொளத்தூர் தாலுகா அலுவலகம் முற்றுகை

நிவாரண தொகை கிடைக்காததை கண்டித்து கொளத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-01-07 22:45 GMT
கீரனூர்,

குளத்தூர் தாலுகாவில் உள்ள கீழையூர், புலியூர், வீரப்பட்டி, நல்லூர், கொத்தமங்கலப்பட்டி, கவேரிநகர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் வழங்கவில்லை என்றும், ஏற் கனவே நிவாரண தொகை கொடுத்தவர்களுக்கே மீண்டும் நிவாரண தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இதை கண்டித்து நிவாரண பொருட்கள் வழங்க கோரி பொதுமக்கள் கொளத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் மனுக்களை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் தொடர்ந்து காந்தி சிலை அருகே கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்