இரிடியம் தருவதாக ரூ.29½ லட்சம் மோசடி 6 பேர் மீது வழக்குப்பதிவு

இரிடியம் தருவதாக ரூ.29½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Update: 2019-01-10 22:45 GMT
மும்பை, 

நவிமும்பை, கலம்பொலியை சேர்ந்தவர் பிரவீன்(வயது39). இவரது நண்பர்கள் கோலாப்பூரை சேர்ந்த கணேஷ், புனேயை சேர்ந்த பிரிஜேஸ், முல்லுண்டு பகுதியை சேர்ந்த மேனன் ஆகியோர் ஆவர். கடந்த 2014-ம் ஆண்டு நண்பர்கள் 3 பேரும் பிரவீனை சந்தித்து பேசினர். அப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் தங்களிடம் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் அதை வீட்டில் வைத்தால் பண மழை கொட்டும் எனவும், எனவே அதை வாங்கி கொள்ளுமாறு பிரவீனிடம் வலியுறுத்தினர்.

இதை உண்மையென நம்பிய பிரவீன், தனது தாய் ரஞ்சன் (60) மற்றும் தந்தையிடம் இருந்து ரூ.29½ லட்சத்தை வாங்கி நண்பர்களிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் இரிடியம் எதையும் கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகிவிட்டனர்.

6 பேருக்கு வலைவீச்சு

இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பிரவீன் மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் இந்த மோசடி குறித்து பிரவீனின் தாய் ரஞ்சன் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நண்பர்கள் மீது புகார் கொடுத்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் தலைமறைவாக உள்ள பிரவீனின் நண்பர்கள் கணேஷ், பிரிஜேஸ், மேனன் ம்அற்றும் உடந்தையாக இருந்த 3 பேர் என 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்