ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

Update: 2019-01-11 22:30 GMT

புதுச்சேரி,

கடந்த 1–ந்தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற 36 வயதுள்ள ஆண் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் முதலில் சங்கராபுரம் அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேல்சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்தது டாக்டர்களால் உறுதி செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்தனர்.

இதைத்தெடர்ந்து அவரிடமிருந்து இதயம், 2 சிறுநீரகம், 2 கருவிழி ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதில் சிறுநீரகங்களும், கருவிழிகளும் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன.

இந்த உறுப்பு மாற்று சிகிச்சையினை பல் உறுப்பு மருத்துவர்கள் குழுவினை சேர்ந்த டாக்டர்கள் சந்தீப் மிஷ்ரா, சக்திராஜன், பிரியா, லெனின் பாபு, செந்தில், மணிகண்டன், ஸ்ரீராக், ரமேஷ் ஆகியோர் நடத்தினார்கள்.

இதயம் சென்னைக்கு, தமிழ்நாடு உறுப்புமாற்று அதிகாரத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.

5 பேரின் உயிர்களை காப்பாற்றுவதற்காக உறுப்புகளை தானமாக அளித்த குடும்பத்தினருக்கு ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் நன்றி தெரிவித்தார். ஜிப்மரில் இதுவரை 183 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், கடந்த 2017 முதல் 5 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்று உள்ளது.

மேலும் செய்திகள்