மண்டபம் அருகே நீர்நிலைகளில் வெளிநாட்டு பறவைகள்

மண்டபம் அருகே நீர்நிலைகளில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன .

Update: 2019-01-11 23:00 GMT
பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள புதுமடம், நொச்சியூரணி, மானாங்குடி, பிரப்பன்வலசை பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் வெள்ளை அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள்மூக்கன், செங்கால் நாரைகள் போன்ற பறவைகள் குவிந்துள்ளன. கூர்மையான வாய் பகுதியை கொண்ட அந்த பறவைகள் தண்ணீரில் மீன்களை கொத்தியபடி வரிசையாக அணிவகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக உள்ளது. பிரப்பன்வலசை பகுதியில் உள்ள நீர்நிலைகளில் கருநீல அரிவாள் மூக்கன் பறவைகள் அதிகம் காணப்படுகின்றன.

இதுபற்றி மண்டபம் வனச்சரகர் சதீஷ் கூறும்போது, உச்சிப்புளி அருகே உள்ள நீர்நிலைகள் மற்றும் வயல்வெளிகளில் இந்தாண்டு அரிவாள்மூக்கன் உள்பட வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் குவிந்துள்ளன.

குறிப்பாக சுமார் 3 அடி உயரம் கொண்ட செங்கால் நாரைகளும் வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள எந்த பறவைகள் சரணாலயத்திற்கும் வராத இந்த பறவை உச்சிப்புளி பகுதிகளுக்கு வந்துள்ளன.

இந்த பறவைகளை தெற்கு ஆசிய நாடுகளில் தான் அதிகம் பார்க்க முடியும். இந்தியாவில் குறைந்த அளவில் தான் பார்க்க முடியும். புழு, பூச்சிகளையே இரையாக சாப்பிடுவதுடன் தரை பகுதியிலேயே இந்த பறவை கூடு கட்டி வாழும் தன்மை கொண்டது என்றார்.

மேலும் செய்திகள்