விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 1,108 பேர் மீது வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2019-01-16 21:30 GMT

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கண்காணிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் தினத்தை முன்னிட்டு மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் அறிவுறுத்தப்பட்டனர்.

1,108 வழக்கு

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக 1,108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 467 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 116 பேர் மீதும், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 41 பேர் மீதும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 64 பேர் உள்ளிட்ட 1,108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ரூ.88 ஆயிரத்து 300 அபராத தொகை வசூல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்