முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை: நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம்

நெல்லைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

Update: 2019-01-19 21:15 GMT

நெல்லை, 

நெல்லைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

போக்குவரத்து மாற்றம்

நெல்லை மாநகருக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகிறார். இதையொட்டி போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

செங்கோட்டை, தென்காசி, ஆலங்குளம் பகுதியில் இருந்து நெல்லைக்கு வருகிற புறநகர் பஸ்கள் டவுன் தொண்டர் சன்னதியில் இருந்து இடதுபக்கமாக திரும்பி குருநாதன் கோவில் விலக்கு, ராமையன்பட்டி விலக்கு, சங்கரன்கோவில் ரோடு, தச்சநல்லூர் சந்திமறிச்சம்மன் கோவில், தச்சநல்லூர் பை–பாஸ் ரவுண்டானா, வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ் நிலையம் செல்ல வேண்டும்.

சங்கரன்கோவிலில் இருந்து வரும் புறநகர் பஸ்கள் ராமையன்பட்டி விலக்கு, சந்திமறிச்சம்மன் கோவில், தச்சநல்லூர் பை–பாஸ் ரவுண்டானா, வண்ணார்பேட்டை வழியாக புதிய பஸ்நிலையம் செல்ல வேண்டும்.

கீழ ரதவீதி–தெற்கு ரதவீதி

இதுதவிர நெல்லை டவுன் கீழ ரதவீதி, தெற்கு ரதவீதியில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்