விழுப்புரத்தில் ரூ.7¾ கோடியில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடம் கட்டும் பணி அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்

விழுப்புரத்தில் ரூ.7¾ கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த ஊரக வளரச்சித்துறை அலுவலக கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-20 23:00 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் வனத்துறை அலுவலகம் அருகில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நட்டு, பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, எம்.பி.க்கள் ராஜேந்திரன், செஞ்சி ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் குமரகுரு, சக்கரபாணி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முத்தமிழ்செல்வன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அற்புதவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி துணை தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணை தலைவர் குமரன், கோல்டு சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்