பாபநாசம் அருகே, முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்; பெண்ணுக்கு கத்திக்குத்து 3 பேர் கைது

பாபநாசம் அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-20 22:16 GMT
பாபநாசம்,

பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி கிராமம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 34). இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய குடும்பத்துக்கும், அதே ஊரை சேர்ந்த ரவி குடும்பத்துக்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரவி குடும்பத்தினருக்கும், கனராஜ் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரவி அவருடைய மகன்கள் ராஜேஷ்(20), செல்வகுமார் மற்றும் உறவினர்கள் சூர்யா, குமரேசன், தினேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 7 பேரும் சேர்ந்து கனகராஜையும், அவரது அண்ணன் பாலமுருகனையும் உருட்டு கட்டை மற்றும் இரும்பு வாளியால் தாக்கினர். இதை தடுக்க வந்த பாலமுருகனின் மனைவி சத்யாவை கத்தியால் குத்தினர்.

இதில் படுகாயமடைந்த கனகராஜ், பாலமுருகன், சத்தியா ஆகிய 3 பேரும் பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து 3 பேரையும் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், சூர்யா, பாலமுருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள செல்வகுமார், குமரேசன், தினேஷ், பாலகிருஷ்ணன் உள்பட பலரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்